FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சென்னையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி கார் மோதி இளைஞர் பலி; ஓட்டுநர் கைது

சென்னையில் அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதிய விபத்தில் இளைஞர் பலியான சம்பவம் குறித்து...

32 வினாடிகள் முன்பு
அமைச்சா் ஜெகதீஸ்வரி - கோப்புப் படம்
பகிர்:

சென்னையில் மகளிர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானார்.

அமைச்சர் ஜெகதீஸ்வரி, இன்றைய சட்டப்பேரவையில் கலந்துகொள்ள விருதுநகரில் இருந்து சென்னை நோக்கி இன்று (செப். 7) அதிகாலையில் அரசு வாகனத்தில் வந்துகொண்டிருந்தார். அவரது குடும்பத்தினரும் அமைச்சருக்கு சொந்தமான மற்றொரு வாகனத்தில் உடன் வந்துகொண்டிருந்தனர்.

இந்த நிலையில், சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூர் பகுதி அருகே வந்துகொண்டிருந்தபோது, அமைச்சர் ஜெகதீஸ்வரியின் குடும்பத்தினர் பயணித்த கார், இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இறையன்பு (26) சம்பவ இடத்திலேயே பலியானார்.

Advertisement

Advertisement

இதனையடுத்து, விபத்தை ஏற்படுத்திய அமைச்சரின் சொந்த வாகனத்தைக் கைப்பற்றி, போக்குவரத்துக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக அதிவேகமாக மற்றும் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டியதாக இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, காரை ஓட்டி வந்த சின்ன அக்னியை காவல்துறையினர் கைது செய்தனர்.

summary

Youth killed in accident involving Minister Jagadeeswari's car in Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments