FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வருங்கால பிரதமர் விஜய்: அமைச்சர் ஜெகதீஸ்வரி

முதல்வர் விஜய்தான் வருங்கால பிரதமர் என அமைச்சர் ஜெகதீஸ்வரி கூறியது குறித்து...

22 வினாடிகள் முன்பு
முதல்வர் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

முதல்வர் விஜய்தான் வருங்கால பிரதமர் என அமைச்சர் ஜெகதீஸ்வரி கூறியுள்ளார்.

விருதுநகரில் இன்று நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் அமைச்சர்கள் கீர்த்தனா மற்றும் ஜெகதீஸ்வரி சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு,  100-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசியதாவது, "மாணவர்கள் நல்வழியில் சென்று ஊழலற்ற ஆட்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இனிவரும் காலங்களில் ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு காலமும் நம்முடைய (தவெக) ஆட்சி மட்டுமே இருக்கும்.

Advertisement

Advertisement

இன்றைய முதல்வர், நாளைய பிரதமர் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. நாம் அனைவரும் ஒவ்வொரு நொடியும் அதனை நோக்கியே பயணிப்போம்" என்று தெரிவித்தார்.

முன்னதாக, முதல்வர் விஜய்தான் அடுத்த பிரதமர் என தவெக அமைச்சர்கள் கூறியதற்கு தவெகவுடன் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாணிக்கம் தாகூர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்திதான் எதிர்க்கட்சிகளின் முகம். அவர்தான் பிரதமர் வேட்பாளர் என்றும் மாணிக்கம் தாகூர் திட்டவட்டமாகக் கூறினார்.

இந்த நிலையில், தவெகவில் மற்றோர் அமைச்சரும் அடுத்த பிரதமர் விஜய்தான் எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

CM Vijay is the future Prime Minister, says Minister Jegadeshwari

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments