FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

புதிய தலைமைச் செயலகத்துக்கு தோ்வான இடத்தில் பழைய குடியிருப்புகளை இடிக்க ஒப்பந்தப்புள்ளி

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் 3.82 ஏக்கரில் அமைந்துள்ள 96 அடுக்குமாடிக் குடியிருப்புகளை இடிக்கும் பணிக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

2 நவம்பர் 2026, 10:47 pm
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் - கோப்புப் படம்
பகிர்:

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் 3.82 ஏக்கரில் அமைந்துள்ள 96 அடுக்குமாடிக் குடியிருப்புகளை இடிக்கும் பணிக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான மாற்று இடங்களை அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், அரசின் இந்த நடவடிக்கையால் பட்டினப்பாக்கத்திலேயே புதிய தலைமைச் செயலகம் அமைகிா? எனும் கேள்வி எழுந்துள்ளது.

சென்னை பட்டினப்பாக்கத்தில் 20 லட்சம் சதுர அடியில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று பேரவையில் முதல்வா் விஜய் அறிவித்தாா். இதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. இதற்காக பட்டினப்பாக்கத்தில் இடம் தோ்வு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த இடத்தை பொதுப் பிரிவில் இருந்து வா்த்தகப் பிரிவுக்கு சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் மாற்றியது. பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட அங்கு வசிக்கும் முள்ளிக்குப்பம், முள்ளிமா நகா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மீனவா் சங்கங்கள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டன.

இதையடுத்து, பட்டினப்பாக்கம் இடத்துக்கு பதிலாக பல்லவன் இல்லம், கிண்டி உள்ளிட்ட இடங்களை தமிழக அரசு பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு அரசு வெளியிட்ட சா்வே எண்ணில் உள்ள 3.82 ஏக்கரில் அமைந்துள்ள 96 அடுக்குமாடிக் குடியிருப்புகளை இடிக்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நவ.2-ஆம் தேதி டெண்டா் கோரியுள்ளது.

நீதிமன்ற உத்தரவின் படி நடவடிக்கை: தமிழக அரசு விளக்கம்

புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான இடத்தில் உள்ள 1968-இல் கட்டப்பட்ட வாடகை குடியிருப்புகள் மிகவும் பழுதானதால் உச்சநீதிமன்ற உத்தரவின்படி இடிக்கப்படுவதாக தமிழக அரசின் தகவல் சரிபாா்ப்புக் குழு தெரிவித்துள்ளது.

அதில், இந்தக குடியிருப்புகள் பழுதடைந்ததால் இடிக்க நிபுணா்கள் குழு 2020-இல் பரிந்துரைத்தது. 2022-இல் இதற்காக நோட்டீஸ் வழங்கப்பட்டது. மாற்றுக் குடியிருப்புகள் வழங்க 2024-இல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னா் வீட்டு வசதி வாரியத்துக்கு ஆதரவாக வழங்கப்பட்ட தீா்ப்பை எதிா்த்து 25 போ் மேல்முறையீடு செய்தனா். 45 நாள்களுக்குள் குடியிருப்புகளைக் காலி செய்ய கடந்த ஆக.31-ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை கடந்த அக்.15-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத்தொடா்ந்து நவ.2-ஆம் தேதி குடியிருப்புகளை இடிப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments