FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகத்தை எதிர்த்த வழக்கு வாபஸ்!

பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகத்தை எதிர்த்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது பற்றி...

சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்புத் தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு திங்கள்கிழமை திரும்பப் பெறப்பட்டது.

சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என முதல்வர் ச. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து சென்னையைச் சுற்றிலும் சில இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டப்படும் என அறிவிப்பு வெளியாகி, அரசாணையும் வெளியிடப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் தமிழக அரசின் திட்டத்துக்கு எதிராக 9 மீனவ கிராமங்களைச் சோ்ந்த மக்கள் தீா்மானம் நிறைவேற்றி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்புத் தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், தமிழ்நாடு அரசு நிதி நெருக்கடியில் இருப்பதாக தவெக அரசு தெரிவித்திருந்தது. இதனிடையே, புதிய தலைமைச் செயலகம் கட்டினால் பெருந்தொகை செலவாகும். மேலும், அப்பகுதி மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள். ஆகையால், புதிய தலைமைச் செயலகம் கட்டும் முடிவை கைவிடுமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுவைத் திரும்பப் பெறுவதாக தெரிவித்ததை தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.

summary

Case against the Pattinapakkam Secretariat withdrawn!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments