ஈரோட்டில் முதல்வர் நிகழ்ச்சிக்கான இடமாற்றம் ஏன்? செங்கோடையன் பதில்
ஈரோட்டில் முதல்வர் நிகழ்ச்சிக்கான இடம் மாற்றப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து...
ஈரோட்டில் முதல்வர் நிகழ்ச்சிக்கான இடம் திடீரென மாற்றப்பட்டுள்ளது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் திங்கள்கிழமை (நவ. 2) பேசியுள்ளார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் 9,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,110 கோடி ரூபாய் வங்கி நிதி இணைப்பு வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் விஜய் நாளை (நவ. 3) ஈரோடு வருகிறார்.
இதனிடையே, பெருந்துறை வாய்க்கால் மேட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறவிருந்த இந்த நிகழ்ச்சி காஞ்சிகோயில் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதுகுறித்து ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:
நாளை காலை சென்னையிலிருந்து விமானத்தில் முதல்வர் விஜய் புறப்படுகிறார். அதன்பிறகு, வாகனம் மூலம் நிகழ்வு நடைபெறும் இடத்துக்கு வருகிறார். வழிநெடுகிலும் மக்கள் இருப்பார்கள். அதற்கேற்றார்போல இங்கு வந்து நிகழ்ச்சியில் பங்கேற்பார். இங்கு எவ்வளவு பேருக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால், இந்த இடம் இறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.
மேலும், இந்த இடமாற்றத்துக்கான காரணம் என்ன என்ற செய்தியாளரின் கேள்விக்கு ”அதெல்லாம் வேண்டாம்” என்று அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துச் சென்றார்.
Minister Sengottaiyan spoke on Monday (Nov. 2) regarding the sudden change of venue for the Chief Minister's event in Erode.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.