FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!

அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக ஆளுநரிடம் அதிமுக புகார்...

15 அக்டோபர் 2026, 12:54 pm IST
அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் - கோப்புப்படம்
பகிர்:

அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் குதிரை பேரத்தை ஊக்குவிப்பதாக தமிழ்நாடு ஆளுநரிடம் அதிமுக புகார் அளித்துள்ளது.

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் உள்பட 6 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர். இதில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகிய இருவரும் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுளளனர்.

இந்த சூழலில், அதிமுகவிலிருந்து மேலும் 15 பேர் தவெகவுக்கு வரத் தயாராக இருப்பதாக தவெக அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் தெரிவித்தது சர்ச்சையாகியுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரை நேரில் சந்தித்த அதிமுக பிரதிநிதிகள், அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிராக புகார் அளித்தனர்.

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுடன் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:

”ஆளுநரிடம் கொடுக்கப்பட்ட மனுவில், ஏற்கெனவே அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 6 பேரை குதிரை பேரம் மூலம் வாங்கி, அவர்களை தவெக ராஜிநாமா செய்ய வைத்துள்ளது. இதன்மூலம் இடைத்தேர்தல் கொண்டு வந்து அவர்களை மீண்டும் போட்டியிட வைத்து, தங்கள் ஆட்சியைத் தக்கவைக்க முயற்சிக்கிறது.

தற்போது தவெகவின் மூத்த அமைச்சர் செங்கோட்டையன், மேலும் 15 பேர் தவெக வரவுள்ளதாக மேடையில் பேசியுள்ளார். அப்படியென்றால், தமிழ்நாட்டில் தொடர்ந்து குதிரை பேரம் நடைபெறுகிறது. அதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பேசியது சான்றாக உள்ளது. குதிரை பேரம் நடத்தும் தவெகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

summary

'Horse-trading' by Minister Sengottaiyan! AIADMK lodges complaint with the Governor!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments