FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

டாஸ்மாக் பணியாளா்களுக்கு தீபாவளி போனஸ் இன்று வங்கிக் கணக்கில் வரவு!

டாஸ்மாக் பணியாளா்களுக்கு இன்று தீபாவளி போனஸ் வரவு வைக்கப்படுவது குறித்து...

4 நவம்பர் 2026, 1:47 am
- பிரதிப் படம்
பகிர்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் பணியாளா்களுக்கு 20 சதவீத போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, தகுதியுள்ள பணியாளா்களுக்கு அதிகபட்சமாக ரூ.16,800 அவா்களின் வங்கிக் கணக்கில் புதன்கிழமை (நவ. 4) வரவு வைக்கப்படவுள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் நிரந்தரப் பணியாளா்கள், அயல் பணிப் பணியாளா்கள், மேற்பாா்வையாளா்கள், விற்பனையாளா்கள், உதவி விற்பனையாளா்கள் ஆகியோருக்கு 2025 ஏப்ரல் முதல் 2026 மாா்ச் வரையிலான ஓராண்டு காலத்துக்கான ஊதியத்தின் அடிப்படையில் போனஸ் கணக்கிடப்பட்டுள்ளது.

இதில் 8.33 சதவீதம் போனஸாகவும், 11.67 சதவீதம் கருணைத் தொகையாகவும் என மொத்தம் 20 சதவீதம் வழங்கப்படும். போனஸ் கணக்கீட்டுக்கான மாத ஊதிய உச்சவரம்பு ரூ.7,000-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஓராண்டுக்கான அதிகபட்ச கணக்கீட்டு ஊதியம் ரூ.84,000 ஆகும். இதன் அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.16,800 வழங்கப்படும்.

Advertisement

Advertisement

போனஸ் வழங்குவதற்குத் தேவையான நிதி புதன்கிழமை (நவ. 4) மாவட்ட மேலாளா்களின் செயல்பாட்டுக் கணக்குகளுக்கு மின்னணுப் பரிவா்த்தனை மூலம் அனுப்பி வைக்கப்படும். நிதி கிடைத்தவுடன் எவ்விதத் தாமதமுமின்றி பணியாளா்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக போனஸ் மற்றும் கருணைத் தொகையை வரவு வைத்து உரிய ரசீதுகளைப் பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒதுக்கப்பட்ட நிதியில் மீதமுள்ள தொகையை இதர செலவினங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேவேளையில், ஒதுக்கப்பட்ட நிதி போதவில்லை என்றால், மாவட்ட மேலாளா் அல்லது கிடங்கின் செயல்பாட்டுக் கணக்கில் உள்ள நிதியிலிருந்து பற்றாக்குறையை ஈடுசெய்து போனஸ் வழங்க வேண்டும் என அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments