அண்ணன் சீர் திட்டம்! 60 ஆயிரம் பட்டுப் புடவைகளுக்கு டெண்டர் வெளியீடு!
அண்ணன் சீர் திட்டத்துக்காக 60,000 பட்டுப் புடவைகள் கொள்முதலுக்கான டெண்டர் வெளியீடு!
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் அண்ணன் சீர் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு பட்டுப் புடவைகள் வழங்குவதற்கான டெண்டரை தமிழக அரச வெளியிட்டுள்ளது.
அண்ணன் சீர் திட்ட பயனாளிகளுக்கு வழங்குவதற்காக முதற்கட்டமாக 60 ஆயிரம் பட்டுப் புடவைகளை பேக் செய்து 38 மாவட்டங்களுக்கு அனுப்பும் வகையில் இந்த டெண்டர் விடப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட டெண்டரில், பட்டுப் புடவையின் தரம் குறித்து சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அனைத்துப் பட்டுப்புடவைகளும் ஒரிஜினல் மல்பெரி சில்க் தரத்துடனும், கைத்தறி பட்டுப் புடவைகளாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
ஒவ்வொரு புடவையும் 300 ஜிஎஸ்எம் அட்டைப் பெட்டிகளில் பேக் செய்யப்பட்டு, 38 மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட வேண்டும்.
பட்டுப்புடவை 6.20 மீட்டர் நீளம் (5.50 மீட்டர் புடவை + 0.70 மீட்டர் ஜாக்கெட்) கொண்டதாக இருக்க வேண்டும். பட்டுப் புடவைகள் எடை 430 கிராம் எடையுடன் இருக்க வேண்டும். இதில், (பட்டு 380 கிராமும், ஜரிகை 50 கிராமும் இருக்கலாம். ஜரிகை எவ்வாறு இருக்க வேண்டும் என்றால், புடவையின் பார்டர், முந்தானை, புட்டாக்களாக இடம்பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டுப் புடவைக்கான டெண்டரில் கூறப்பட்டிருக்கும் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்று பட்டுப்புடவை தயாரிப்பு நிறுவனங்கள் டெண்டர் கோரலாம். இதில் குறைந்த விலையை குறிக்கும் நிறுவனங்களுக்கு அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு ஆர்டர் கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.