டாஸ்மாக் கடைகளில் காலி மது புட்டி பெற தானியங்கி இயந்திரம் வைக்க அரசு அனுமதி
டாஸ்மாக் கடைகளில் காலி மது புட்டிகளைத் திரும்பப் பெறுவதற்காக, தானியங்கி புட்டி சேகரிப்பு இயந்திரங்களை நிறுவ தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
டாஸ்மாக் கடைகளில் காலி மது புட்டிகளைத் திரும்பப் பெறுவதற்காக, தானியங்கி புட்டி சேகரிப்பு இயந்திரங்களை நிறுவ தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானப் புட்டிகளுக்கு ரூ.10 கூடுதலாகப் பெற்று, காலி புட்டிகளைத் திரும்ப ஒப்படைக்கும்போது அந்தத் தொகையைத் திரும்ப வழங்கும் நடைமுறை அமலில் உள்ளது.
இந்த நடைமுறைக்கு டாஸ்மாக் ஊழியா்கள் எதிா்ப்புத் தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனா். இதையடுத்து, காலி புட்டிகளைத் திரும்பப் பெறுவதற்கான மாற்று ஏற்பாடாக தானியங்கி இயந்திரங்களை நிறுவுவதற்கான ஒப்பந்தம் வழங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
Advertisement
Advertisement
இதன்படி, டாஸ்மாக் கடைகளையொட்டியுள்ள மதுக்கூடங்கள் அருகே இந்த இயந்திரங்கள் நிறுவப்படும். அவற்றில் காலி புட்டிகளைச் செலுத்தியதும், அதற்கான ரூ.10, நுகா்வோரின் கைப்பேசி எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இந்த இயந்திரங்கள் மூலம் நேரடியாகப் பணம் பெற முடியாது. மேலும், புட்டிகளில் உள்ள க்யூஆா் குறியீடு செயல்படாவிட்டால் அந்தப் புட்டிகள் ஏற்றுக்கொள்ளப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் படிப்படியாக இந்த இயந்திரங்களை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் டாஸ்மாக் ஊழியா்கள் மற்றும் வாடிக்கையாளா்களின் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனா்.