அன்பில் மகேஸுக்கு நவ. 6 வரை நீதிமன்றக் காவல்!
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் நவ. 6 வரை நீதிமன்றக் காவலில் மீண்டும் சிறையில் அடைப்பு..
காவல்துறை காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை, நவ. 6ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அன்பில் மகேஸ், மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்படுகிறார்.
ரூ.100 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸை நவ. 4ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினருக்கு சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
3 நாள்கள் காவல்துறை காவல் முடிந்து சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று அன்பில் மகேஸ் ஆஜர்படுத்தப்பட்டார். மூன்று நாள்களாக காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Advertisement
Advertisement
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அன்பில் மகேஸிடம், காவல்துறையினர், உடல் மற்றும் மனதளவில் காவல்துறையினர் துன்புறுத்தினார்களா? என்று நீதிபதி கேள்வி எழுப்பியதற்கு, இல்லை என பதிலளித்தார். மேலும், உணவு சரியாக வழங்கப்பட்டதாகவும் கூறியிருந்தார் அன்பில் மகேஸ்.
ஏற்கனவே நவ. 6 வரை நீதிமன்றக் காவல் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், காவல்துறை காவல் முடிந்து அன்பில் மகேஸ் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்படுகிறார்.