FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஜெர்மனியில் குழந்தையுடன் அலுவலகத்துக்கு வந்த பெண் நிர்வாகியுடன் அமைச்சர் கீர்த்தனா!

ஜெர்மனியில் குழந்தையுடன் அலுவலகத்துக்கு வந்த பெண் நிர்வாகியைச் சந்தித்து பேசிய விடியோவை அமைச்சர் கீர்த்தனா பகிர்ந்துள்ளதைப் பற்றி...

ஜெர்மனியில் குழந்தையுடன் அலுவலகத்துக்கு வந்த பெண் நிர்வாகியுடன் அமைச்சர் கீர்த்தனா.
பகிர்:

ஜெர்மனியில் குழந்தையுடன் அலுவலகத்துக்கு வந்த பெண் நிர்வாகியைச் சந்தித்து பேசிய விடியோவை அமைச்சர் கீர்த்தனா பகிர்ந்துள்ளார்.

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கவும், உலக நாடுகளுடனான பொருளாதார உறவை வலுப்படுத்தவும் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா, அரசு முறை பயணமாக ஜெர்மனி சென்றுள்ளார். முனிச் நகரில் பல்வேறு முன்னணி நிறுவன அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

குவாண்டம் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், செயல்பாடுகள் துணைத் தலைவருமான அலெக்ஸான்ட்ரா டாமன்ஹெய்ன் தனது குழந்தையுடன் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது அவரைத் தமிழக தொழில்துறை அமைச்சர் செல்வி எஸ். கீர்த்தனா நேரில் சந்தித்துப் பேசினார்.

Advertisement

Advertisement

இந்தச் சந்திப்பு தொடர்பான புகைப்படங்களையும், தனது கருத்துகளையும் அமைச்சர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இன்றைய காலகட்டத்தில் பெண்கள் குடும்பப் பொறுப்புகளையும், தங்களது தொழில்முறைப் பொறுப்புகளையும் ஒருசேர ஏற்று, மிகுந்த அர்ப்பணிப்புடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக, தாய்மைப் பொறுப்புகளை நிறைவேற்றிக் கொண்டே உயர் பதவிகளில் இருந்து நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் முக்கியப் பங்களிப்பை வழங்கும் பெண்களின் உழைப்பும், உறுதியும் பாராட்டுக்குரியவை என்பதை இந்தச் சந்திப்பு எடுத்துரைக்கிறது.

ஒரு பெண் தனது குழந்தையைப் பராமரிப்பதற்கும், அதே நேரத்தில் தனது பணியைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கும் பணியிடங்களில் உரிய ஆதரவும் புரிதலும் இருக்க வேண்டியது அவசியம் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது.

பெண்களின் திறமைகளையும், சாதனைகளையும் அங்கீகரிப்பதுடன், தாய்மார்களின் தேவைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பணியிடங்கள் அமைந்திட வேண்டும். குழந்தைப் பராமரிப்புக்கும் தொழில் வளர்ச்சிக்கும் இடையே பெண்கள் சவால்களைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படாத வகையில், அவர்களுக்கு ஆதரவான மற்றும் சமத்துவமான பணிச்சூழலை உருவாக்குவது அனைவரின் பொறுப்பாகும்” எனப் பதிவிட்டுள்ளார்.

summary

Minister Keerthana has shared a video of her meeting and speaking with a female executive in Germany who brought her child to the office.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.