ஆன்லைன் பட்டாசு விற்பனை... மக்கள் ஏமாற வேண்டாம்: அமைச்சர் கீர்த்தனா
தீபாவளி பண்டிகையையொட்டி ஆன்லைன் பட்டாசு விற்பனையில் நடைபெறும் மோசடிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்..
தீபாவளி பண்டிகையையொட்டி ஆன்லைன் பட்டாசு விற்பனையில் நடைபெறும் மோசடிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அமைச்சர் கீர்த்தனா பதிவிட்டுள்ளதாவது:
தீபாவளியை முன்னிட்டு ஆன்லைன் பட்டாசு விற்பனையில் நடைபெறும் மோசடிகளில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
Advertisement
Advertisement
குறைந்த விலை, சிறப்பு சலுகைகள் போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி, அறிமுகமில்லாத இணையதளங்களில் முன்கூட்டியே பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.
சந்தேகத்திற்கிடமான இணையதளங்கள், அழைப்புகள் மற்றும் இணைப்புகளைத் தவிர்த்து, பாதுகாப்பான முறையில் பொருட்களை வாங்குங்கள்.
சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்.
பண்டிகைக் கொண்டாட்டங்களை மகிழ்ச்சியுடனும், பாதுகாப்புடனும் கொண்டாடுவோம் எனப் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் நவம்பர் 8 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.
Online firecracker sales... Public advised not to get scammed Minister Keerthana
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.