அடுத்த ஆண்டில் ரூ. 10,000 கோடி பட்டாசு விற்பனை இலக்கு: அமைச்சர் கீர்த்தனா உறுதி!
அடுத்த ஆண்டில் ரூ. 10,000 கோடிக்கு பட்டாசு விற்பனை என்ற இலக்குக்கு தமிழக அரசு ஆதரவளிக்கும் என தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தது குறித்து...
அடுத்த ஆண்டில் ரூ. 10,000 கோடிக்கு பட்டாசு விற்பனை என்ற விற்பனையாளர்களின் இலக்குக்கு தமிழக அரசு ஆதரவளிக்கும் என தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா திங்கள்கிழமை (நவ. 9) தெரிவித்துள்ளார்.
தீபாவளிப் பண்டிகையை மக்கள் நேற்று பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடினர். இதுகுறித்து பட்டாசு விற்பனையாளர் ஒருவர் பேசுகையில், “இந்தாண்டு ரூ. 8,000 கோடிக்கு மேல் பட்டாசு விற்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்திருந்தோம். ஆனால், மழை, அதிகாரிகளின் ஆய்வு உள்ளிட்ட காரணங்களால் ரூ. 7,000 கோடிக்கு பட்டாசுகளை விற்பனை செய்துள்ளோம். அடுத்த ஆண்டில் ரூ. 10,000 கோடிக்கு பட்டாசு விற்பனை என்ற இலக்கை நோக்கி பயணிப்போம்” என்று தெரிவித்தார்.
அந்த விடியோவைக் குறிப்பிட்டு தனது எக்ஸ் தளப் பதிவில் அமைச்சர் கீர்த்தனா தெரிவித்திருப்பதாவது:
Advertisement
Advertisement
சிவகாசியின் தளராத உழைப்பும் தன்னம்பிக்கையும் தமிழ்நாட்டின் பெருமை! ஒவ்வொரு பட்டாசுக்குப் பின்னாலும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் கடின உழைப்பும், திறமையும் எதிர்காலக் கனவுகளும் அடங்கியுள்ளன.
முதல்வர் ஜோசப் விஜய்யின் தலைமையில் செயல்படும் நமது அரசு, இந்த பாரம்பரியமிக்க தொழிலைப் பாதுகாக்கவும், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், சிவகாசியை மேலும் பல உயரங்களுக்குக் கொண்டு செல்லவும் உறுதுணையாக இருக்கும்.
அடுத்த ஆண்டில் ரூ.10,000 கோடி விற்பனை என்ற மாபெரும் இலக்கை நோக்கிப் பயணிக்கும் இத்தொழிலுக்கு, அந்த மைல்கல்லை எட்ட தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் முழு ஆதரவையும் வழங்கும் என்று உறுதியளிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.