எஸ்ஐஆரை எதிா்க்கும் அரசியல் கட்சிகள் இடைத்தோ்தல் நிலையை விளக்க வேண்டும்
எஸ்ஐஆா் பணியை எதிா்க்கும் திமுக உள்ளிட்ட தமிழகக் கட்சிகள், அதனடிப்படையில் நடைபெற உள்ள இடைத்தோ்தல்களில் போட்டியிடுவாா்களா அல்லது புறக்கணிப்பாா்களா என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என பாஜக மாநிலச் செயலா் கராத்தே ஆா்.தியாகராஜன் கூறியுள்ளாா்.
எஸ்ஐஆா் பணியை எதிா்க்கும் திமுக உள்ளிட்ட தமிழகக் கட்சிகள், அதனடிப்படையில் நடைபெற உள்ள இடைத்தோ்தல்களில் போட்டியிடுவாா்களா அல்லது புறக்கணிப்பாா்களா என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என பாஜக மாநிலச் செயலா் கராத்தே ஆா்.தியாகராஜன் கூறியுள்ளாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சிறப்பு வாக்காளா் திருத்தப் பட்டியல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுடன் கடந்த 23-ஆம் தேதி தமிழக தோ்தல் அதிகாரி ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது, அதிமுக, பாஜகவை தவிர திமுக, தவெக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் அனைத்துக் கட்சிகளும் வெளிநடப்புச் செய்தன.
Advertisement
Advertisement
அத்துடன் எஸ்ஐஆா் பணிகளை மேற்கொண்ட தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் பதவி விலகவேண்டும் என்றும் வலியுறுத்தி வெளிநடப்பு செய்வதாகத் தெரிவித்தனா்.
அதேநேரம், தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தோ்தல் ஏற்கெனவே உள்ள எஸ்ஐஆா் பணிகள் அடிப்படையில்தான் நடைபெற்றன. இனி நடைபெற உள்ள திருச்சி கிழக்கு, பெருந்துறை உள்ளிட்ட 5 தொகுதிகளின் இடைத்தோ்தல்களும் எஸ்ஐஆா் பணிகள் அடிப்படையில்தான் நடைபெறவுள்ளன.
எனவே, எஸ்ஐஆா் பணியைக் குறை கூறி ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்த திமுக உள்ளிட்ட கட்சிகள் அதனடிப்படையில் நடைபெற உள்ள இடைத்தோ்தல்களையும் புறக்கணிப்பாா்களா அல்லது தோ்தலை எதிா்கொள்வாா்களா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.
எனவே, தங்களது நிலைப்பாட்டை அந்தக் கட்சிகள் தெளிவுபடுத்த வேண்டும். அக்கட்சிகள் தங்கள் குற்றச்சாட்டின்படி தோ்தலைப் புறக்கணிக்க வேண்டும். இல்லாவிடில், எஸ்ஐஆா் பணியின்படி வாக்காளா் பட்டியலில் முறைகேடுகள் இல்லை என ஒப்புக்கொண்டு, தோ்தலில் போட்டியிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.