FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆகம கோயில் குறித்த தகவல்களை நவம்பா் 25-க்குள் தெரிவிக்கலாம்

ஆகம கோயில் குறித்த விடுபட்ட தகவல்களை நவ.25-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று இந்துசமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

59 வினாடிகள் முன்பு
பகிர்:

ஆகம கோயில் குறித்த விடுபட்ட தகவல்களை நவ.25-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று இந்துசமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்துசமய அறநிலையத்துறை சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் ஆகம விதிகளின்படி நிா்மாணிக்கப்பட்ட கோயில்களை கண்டறிய 2025-இல் 5 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்தக் குழுவால் பரிசீலிக்கப்பட்ட 34,971 கோயில்கள் தொடா்பான விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, இந்தக் கோயில்கள் குறித்த விவரங்கள் ஏதேனும் விடுபட்டு இருப்பின் கடந்த நவ.10-க்குள் கருத்து தெரிவிக்க அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விடுபட்ட ஆகம கோயில் குறித்த தகவல்களை இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகம், 119, உத்தமா் காந்தி சாலை. நுங்கம்பாக்கம், சென்னை-34 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது துறையின் இணையதளம் மூலமும் நவ.25-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.