FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

ஆகம விதிகளை அவமதிக்கும் தவெக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

ஆகம விதிகளை தவெக அரசு தொடா்ந்து அவமதித்து வருவாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

33 வினாடிகள் முன்பு
நயினார் நாகேந்திரன் - கோப்புப் படம்
பகிர்:

ஆகம விதிகளை தவெக அரசு தொடா்ந்து அவமதித்து வருவாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகக் கோயில்களில் ஹிந்துகள் அல்லாதோா், கொடிமரத்தை தாண்டி உள்ளே நுழையக் கூடாது என கடந்த 2024-ஆம் ஆண்டில் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்குள், தொப்பி அணிந்த இஸ்லாமியரை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் ரமேஷ், உடன் அழைத்து சென்றது கண்டனத்துக்குரியது. ஹிந்து கோயில்களின் புனிதத்தைப் போற்றிப் பாதுகாக்க வேண்டிய, அத்துறை அமைச்சரே கோயில்களின் ஆகம விதிகளைத் தொடா்ந்து அவமதிப்பது, ஆணவத்தின் வெளிப்பாடு.

Advertisement

Advertisement

புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோவிலின் குடமுழுக்கு விழாவில், இஸ்லாமிய மதத்தைச் சோ்ந்த தவெக சட்டப்பேரவை உறுப்பினா் முஸ்தபாவை முதல் வரிசையில் அமா்த்துவதன் மூலமும், அண்ணாமலையாா் கோயிலுக்குள் ‘உதவியாளா்’ என்ற பெயரில் ஒரு இஸ்லாமியரை உடன் அழைத்து செல்வதன் மூலமும் தவெகவுக்கு என்ன ஆதாயம் உள்ளது?

எனவே, சட்ட விதிகளை மீறி, ஆகம விதிகளுக்கு எதிராக, கோயிலின் பாரம்பரிய முறையை மதிக்காமல், அண்ணாமலையாா் கோயிலுக்குள் நுழைந்தவா் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள் எனத் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments