FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஞானேஷ் குமாரை கைது செய்யக் கோரி காஞ்சிபுரத்தில் ரயில் மறியல்!

இந்தியத் தலைமைத் தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமாரை கைது செய்யக் கோரி காஞ்சிபுரத்தில் ரயில் மறியல்...

காஞ்சிபுரத்தில் ரயில் மறியல் - video crop
பகிர்:

இந்தியத் தலைமைத் தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமாரை கைது செய்யக் கோரி காஞ்சிபுரம் ரயில் மறியலில் ஈடுபடும்போது காவல் துறையினருடன் போராட்டக் குழு தள்ளுமுள்ளு நடைபெற்றது.

13 கோடி வாக்காளர்களை தகுதி நீக்கம் செய்து பிரதமர் மோடிக்கு துணை போக வழி வகுத்ததாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை கைது செய்யக்கோரி காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையம் அருகே ஜனநாயக மீட்புக் குழு சார்பில் ரயில் மறியல் போராட்டம் இன்று அறிவிக்கப்பட்டது.

இதனை ஒட்டி அப்பகுதியில் காவல் துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுக் கண்காணிக்கப்பட்டனர்.

Advertisement

Advertisement

ஹோட்டல் தமிழ்நாடு அருகிலிருந்து போராட்டக் குழுவினர் சுமார் 350க்கும் மேற்பட்டோர் பேரணியாகக் கிழக்கு ரயில்வே நிலையம் நோக்கிச் சென்றபோது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டபோது இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தடைகளை மீறி சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து பிரதமர் மோடிக்கு துணை போன தலைமைத் தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமாரைக் கைது செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இறுதியாக காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இதில் மக்கள் மன்றம் , சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பல தரப்பினரும் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.