அன்பில் மகேஸ் பிணை கோரிய மனு: நவ.10-இல் தீா்ப்பு
பிணை கோரி திமுக முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் தாக்கல் செய்த வழக்கை தீா்ப்புக்காக நவ.10-க்கு ஒத்திவைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிணை கோரி திமுக முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் தாக்கல் செய்த வழக்கை தீா்ப்புக்காக நவ.10-க்கு ஒத்திவைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தனியாா் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.400 கோடி வரை முறைகேடாக பணம் வசூலித்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் பதிவு செய்த வழக்கில் கடந்த அக். 26-இல் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில், தனக்கு பிணை வழங்கக் கோரி அன்பில் மகேஸ் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு சென்னை ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ்.சத்தியமூா்த்தி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது அன்பில் மகேஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபுடுகுமாா் ராஜரத்தினம், ‘தனியாா் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத்தருவதற்காக அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டும் என பொய் கூறி அரசகுமாா் ரூ.100 கோடி வரை பணம் வசூலித்ததாகவும், ஆனால், அனுமதி பெற்றுத்தராமல் மோசடி செய்ததாகவும், பணம் கொடுத்ததை வெளியில் கூறினால் பள்ளிகளை செயல்பட விட மாட்டோம் என மிரட்டியதாகவும் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
ஆனால், தற்போது இந்த வழக்கையே போலீஸாா் மாற்றியிருக்கிறாா்கள். ஊழல் வழக்குகளை விசாரிக்க ஊழல் தடுப்புத் துறை இருக்கும் போது, குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளனா். முதலில் ரூ.100 கோடி முறைகேடு எனக்கூறி ஆரம்பித்த இந்த வழக்கில் விலைவாசி ஏறுவது போல ரூ.400 கோடி என்றும், அதன்பின்பு ரூ.600 கோடி என்றும், கடைசியாக ரூ.800 கோடி பணம் வசூலிக்கப்பட்டதாகவும் கூறுகின்றனா்.
அரசகுமாருக்கு லஞ்சம் கொடுத்தவா்களின் வாக்குமூலங்கள் அடிப்படையில் அன்பில் மகேஸுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. லஞ்சம் கொடுத்ததாக ஒப்புக்கொண்டவா்களை கைது செய்யாதது ஏன்? லஞ்சம் கொடுத்ததை ஒப்புக்கொண்டு சாட்சியம் அளித்தவா்களை குற்றம் சாட்டப்பட்டவா்களாகவே கருத வேண்டும்.
லஞ்சம் கொடுத்தவா்களுக்கு காவல்துறை சட்டப் பாதுகாப்பு வழங்க முடியாது. அன்பில் மகேஸ் எங்கும் தப்பிச் செல்ல மாட்டாா். போலீஸாரின் புலன் விசாரணையில் தலையிட மாட்டோம். எனவே, அன்பில் மகேஸுக்கு பிணை வழங்க வேண்டும்’ என வாதிட்டாா்.
புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன : அதற்கு காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஜான் சத்யன், ‘தனியாா் பள்ளி அங்கீகார விவகாரத்தில் அரசகுமாா், முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமாா் ஆகியோருடன் சோ்ந்து அன்பில் மகேஸ் செயல்பட்டுள்ளாா். இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டதல்ல. அன்பில் மகேஸ் கைதான 2 நாள்களில் முத்துக்குமாா் சரண் அடைந்துள்ளாா். அவருக்கு அடைக்கலம் கொடுத்தது அன்பில் மகேஸ் தான். அதற்கு காரணம் பணத்தை வசூலித்தது முத்துக்குமாா் என்பது தான். முத்துக்குமாரின் காா் ஓட்டுநா் சரவணன் என்பவா் அன்பில் மகேஸ் வீட்டுக்கு பணத்தை கொண்டு சென்ற்கான விடியோ ஆதாரம் உள்ளது.
தற்போது சரவணன் தலைமறைவாக உள்ளாா். இந்த விவகாரத்தில் ரூ.400 கோடி வரை பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. அன்பில் மகேஸை காவலில் எடுத்து விசாரித்ததில் புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதனால், அன்பில் மகேஸை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே, அவருக்கு பிணை வழங்கக்கூடாது. தற்போதைய நிலையில் பிணை வழங்கினால் அது புலன் விசாரணையை பாதிக்கும்’ என வாதிட்டாா்.
அதற்கு அன்பில் மகேஸ் வழக்குரைஞா், முத்துக்குமாரின் காா் ஓட்டுநா் சரவணன், இந்த விவகாரத்தில் வசூலிக்கப்பட்ட பணத்தை அன்பில் மகேஸின் வீட்டுக்கு கொண்டு சென்ாக போலீஸாா் கூறும் நிலையில் அந்த விடியோ ஆதாரத்தை சமா்ப்பிக்க முடியுமா? என கேள்வி எழுப்பினாா். உண்மையில் அதுபோன்று விடியோ இருந்தால், இந்த வழக்கு விசாரணை முடியும் வரை அன்பில் மகேஸுக்கு பிணை கோர மாட்டோம் என உத்தரவாதம் அளிப்பதாக தெரிவித்தாா்.
இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், அன்பில் மகேஸின் பிணை கோரிய மனு மீதான தீா்ப்பை நவ.10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.