அன்பில் மகேஸ் பிணை கோரி மனு
ரூ.100கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் பிணை கோரி சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல்
தனியாா் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.100கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் பிணை கோரி சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.
கடந்த திமுக ஆட்சியில் தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்டவை பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்ததாக தனியாா் பள்ளிகள் சங்கம் அளித்த புகாரில் முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கில் தனக்கு முன்பிணை வழங்கக் கோரி அன்பில் மகேஸ் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். அந்த மனுவில், சாதாரண பிரிவுகளின்கீழ் ஆரம்பத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த இந்த வழக்கு, பின்னா் ஊழல் தடுப்புச் சட்டம் (1988) பிரிவு 7 மற்றும் 12 ஆகியவற்றின் கீழ் மாற்றப்பட்டு, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்களில் 5-ஆவது நபராக எனது பெயா் சோ்க்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக திட்டமிட்டு என் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனிநபா்கள் பணம் வசூலித்ததாக மட்டுமே போலீஸாா் குற்றம்சாட்டிஉள்ளனா். நான் நேரடியாக லஞ்சம் பெற்ாகவோ அல்லது சட்டவிரோதமாக பயன்பெறும் வகையில் செயல்பட்டதாகவோ போலீஸாா் எந்த ஆதாரத்தையும் தெரிவிக்கவில்லை.
தனியாா் பள்ளிகளின் கோரிக்கைகள் மற்றும் அவா்கள் அளித்த மனுக்கள் மீது பள்ளிக்கல்வித் துறை வழக்கமாக எடுக்கும் நிா்வாக ரீதியிலான நடவடிக்கைகளை மட்டுமே எடுத்தது. இதில் தனிப்பட்ட முறையில் சலுகைகள் எதுவும் வழங்கப்படவும் இல்லை, அதிகாரத்தைத் தவறாகவும் பயன்படுத்தவும் இல்லை. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முதல் மற்றும் 2-ஆவது நபா்கள், தங்களுக்கு என்னுடன் தொடா்பு இருப்பதாகக் கூறி தனியாா் பள்ளி நிா்வாகத்தினரிடம் பணம் வசூலித்துள்ளனா்.
அவா்கள் எனது பெயரை தவறாக பயன்படுத்தியதற்கு நான் பொறுப்பாக முடியாது. நான் லஞ்சம் பெற்ாக எந்தவொரு சாட்சியமும் இல்லை. சாட்சிகளின் வாக்குமூலத்தின்படி, என் பெயரை பயன்படுத்தி பணம் வசூலித்துள்ளனா் என்பது மட்டுமே தெளிவாகிறது. ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 17(ஏ)-இன்படி, என் மீதான விசாரணைக்கு ஆளுநரின் முன்அனுமதி பெற வேண்டும். ஆனால் அனுமதி பெறாமல் தன்னிச்சையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது சட்டவிரோதமானது.
போலீஸாா் விசாரணைக்கு அழைத்தபோது, நேரில் ஆஜராகி முழு ஒத்துழைப்பு அளித்துள்ளேன். நான் கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு தொடா் மருத்து கண்காணிப்பு தேவைப்படுகிறது. எனவே, எனக்கு பிணை வழங்க வேண்டும் எனஅந்த மனுவில் கூறியிருந்தாா். இந்த மனு வியாழக்கிழமை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.