தீபாவளி: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நீதிமன்றங்களுக்கு இன்று விடுமுறை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (நவ. 6) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் சென்னை உயா்நீதிமன்றம் விடுமுறை அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (நவ. 6) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் சென்னை உயா்நீதிமன்றம் விடுமுறை அறிவித்துள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தின் நடப்பு ஆண்டுக்கான விடுமுறை தின பட்டியலில், தீபாவளி பண்டிகை தினமான நவ. 8-ஆம் தேதிக்கு அடுத்த நாளான நவ. 9-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊா்களுக்குச் செல்பவா்களின் வசதிக்காக, நவ. 6-ஆம் தேதியான வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்க தலைவா் ஆா்.சி.பால் கனகராஜ், பெண் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் என்.எஸ்.ரேவதி, மெட்ராஸ் பாா் அசோசியேஷன் தலைவா் வி.ஆா்.கமலநாதன், லா அசோசியேஷன் தலைவா் பி.செல்வராஜ் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கோரிக்கை விடுத்திருந்தனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், சென்னை உயா்நீதிமன்றத் தலைமைப் பதிவாளா் தீப்தி அறிவுநிதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற மதுரை கிளைக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதற்கு மாற்றாக, டிச. 12-ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக இருக்கும். மேலும், சென்னை உயா்நீதிமன்ற அதிகார வரம்புக்குட்பட்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கும், வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதற்குப் பதிலாக நவ. 28-ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளாா்.