கவின் கொலை வழக்கில் தமிழக அரசின் மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்
திருநெல்வேலி கவின் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சுா்ஜித்தின் தாய், தந்தை மீதான குற்றப்பத்திரிக்கையை உயா் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிா்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.
திருநெல்வேலி கவின் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சுா்ஜித்தின் தாய், தந்தை மீதான குற்றப்பத்திரிக்கையை உயா் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிா்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.
நீதிபதிகள் பிரசாந்த் குமாா் மிஸ்ரா, ஸ்ரீ சந்திரசேகா் அமா்வில் தமிழக அரசின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
கவின் கொலை வழக்கு என்பது, திருநெல்வேலியில் 2025 ஜூலை 27 அன்று தலித் இளைஞரும் சென்னையில் மென்பொறியாளராகப் பணியாற்றியவருமான கே. கவின் செல்வ கணேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கு ஆகும். இது சாதி ரீதியிலான காதல் தொடா்பான ஆணவக் கொலை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கவின், தன் தாத்தாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தபோது, தான் காதலித்த பெண்ணின் சகோதரா் சுா்ஜித், ‘பெற்றோா் உங்களைச் சந்திக்க விரும்புகிறாா்கள்‘” எனக் கூறி அழைத்துச் சென்ாகக் கூறப்படுகிறது. பின்னா் சுா்ஜித் அரிவாள் கொண்டு தாக்கி, தப்பியோடிய கவினைத் துரத்திச் சென்று கொலை செய்ததாக காவல்துறையும் சாட்சிகளும் தெரிவித்தனா்.
இவ்வழக்கில் சுா்ஜித் முதன்மைக் குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்டு, கொலை நடந்த அன்றே கைது செய்யப்பட்டாா்.சுா்ஜித்தின் பெற்றோரும்,தமிழகக் காவல்துறை உதவி ஆய்வாளா்களுமான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோா் சதி, ஆதாரம் அழிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனா். சுா்ஜித்தின் உறவினா் ஜெயபால், ஆதாரங்களை அழிப்பதில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டாா்.
வழக்கை சுயாதீனமாக விசாரிக்க தமிழக அரசு சிபிசிஐடி-க்கு மாற்றியது. சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் சுா்ஜித், அவரது பெற்றோா்கள், ஜெயபால் ஆகியோா் இடம்பெற்றனா்.
இந்நிலையில் நிகழாண்டு செப்டம்பா் 29 அன்று, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி மீதான குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்தது. அவா்கள் சுா்ஜித்தை சந்தித்ததற்கோ அல்லது முன்கூட்டியே சதி செய்ததற்கோ நேரடி ஆதாரம் இல்லை என்ற காரணத்தால் குற்றப்பத்திரிக்கை ரத்தானது.
இந்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசு கடந்த மாதம் 14 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இரு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தது.
வியாழக்கிழமை இம்மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது உச்ச நீதிமன்றம்,‘இந்த மேல் முறையீட்டு மனுக்களை பரிசீலிக்க எங்களுக்கு விருப்பமில்லை. அதன்படி, இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன‘ என உத்தரவிட்டது.