பெரியார் பெயரிலும் ஊழல்: அமைச்சர் நிர்மல் குமார்
பெரியாரின் பெயரில்கூட எவ்விதக் கூச்சமும் இல்லாமல் ஊழல் செய்துள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்திருப்பது பற்றி...
பெரியாரின் பெயரில்கூட எவ்விதக் கூச்சமும் இல்லாமல் ஊழல் செய்துள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், திமுக ஆட்சிக் காலத்தில் எந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டாலும் ஊழல் மற்றும் கமிஷன் இல்லாமல் நடைபெற்றதில்லை என்று அமைச்சர் நிர்மல் குமார் விமர்சித்தார்.
பெரியாரின் பெயரில்கூட எவ்விதக் கூச்சமும் இல்லாமல் ஊழல் செய்துள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகம் குறித்தும் கேள்வி எழுப்பினார்.
Advertisement
Advertisement
மதுரைக்கும் கலைஞருக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்றும், மதுரை மண்ணின் மைந்தர்களின் பெயர்களை நூலகத்திற்குச் சூட்டாமல் கட்சித் தலைவர்களின் பெயர்களைச் சூட்டுவதற்காகவே இதுபோன்ற பிரம்மாண்டமான கட்டடங்கள் கட்டப்பட்டு, அதில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்குவதில்கூட கமிஷன் பெற்றதாகக் கூறி, முந்தைய ஆட்சியின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.