FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நெருங்கும் தீபாவளி! மதுரை மலர்ச் சந்தையில் பூக்களின் விலை நிலவரம்!

நெருங்கும் தீபாவளிப் பண்டிகைக்கு இடையே மதுரை மலர்ச் சந்தையில் பூக்களின் விலை நிலவரம்

பூக்களின் விலை உயா்வு - கோப்பிலிருந்து
பகிர்:

மதுரை: தீபாவளிப் பண்டிகை நெருங்கும் வேளையில், மதுரை மலர்ச் சந்தையில் பூக்களின் இன்றைய விலை நிலவரம் வெளியாகியிருக்கிறது.

தீபாவளி மற்றும் கேதார கௌரி விரதம் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், பொதுவாகவே சந்தைகளில் பூக்களின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளது.

மதுரையில் பூக்கள் விலை குறைந்திருந்த நிலையில் தற்போது சற்று அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

மதுரை மல்லி கிலோ ரூ.1400, பிச்சி ரூ.1000, முல்லை ரூ.1000, செவ்வந்தி ரூ.150, சம்பங்கி ரூ.200, செண்டு மல்லி ரூ.60, கனகாம்பரம் ரூ.1500, ரோஸ் ரூ.150, பட்டன் ரோஸ் ரூ.200, பன்னீர் ரோஸ் ரூ.250, கோழிக்கொண்டை ரூ.90, அரளி ரூ.500, மரிக்கொழுந்து ரூ.120, தாமரை (ஒன்றுக்கு) ரூ.40 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் கூறுகையில், 'பூக்களின் விளைச்சல் சமாராக உள்ளது. இதனால் வரத்து 3 டன்னாக உள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வருகின்ற காரணத்தால் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்து காணப்படுகிறது. தீபாவளி வரை இதே விலை நிலவரம் நீடிக்கும். அடுத்த வாரத்தில் பூக்களின் விலை குறைய வாய்ப்பு உண்டு. திருமண முகூர்த்தத்தை ஒட்டி பூக்களின் விலை உயரக்கூடும் எனத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.