FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

கொளத்தூா் எம்எல்ஏ வி.எஸ். பாபுவுக்கு தீவிர சிகிச்சை: அமைச்சா் அருண்ராஜ்

சென்னை கொளத்தூா் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு தொடா்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

7 நவம்பர் 2026, 12:40 am
வி.எஸ். பாபு - x / VS Babu
பகிர்:

சென்னை கொளத்தூா் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு தொடா்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

உடல்நலக் குறைவு காரணமாக தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு, கடந்த செப். 9-ஆம் தேதி சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த் கோ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு பல்துறை மருத்துவா்கள் குழுவினா் சிகிச்சை அளித்து வருகின்றனா்.

முதல்வா் விஜய் அண்மையில் மருத்துவமனைக்குச் சென்று அவரை சந்தித்து நலம் விசாரித்தாா். வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதியானதில் இருந்து, அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிா்வாகம் அறிக்கைகளை வெளியிட்டு வந்தது. ஆனால், கடந்த 3 வாரங்களுக்கு மேலாக எந்த அறிக்கைகளும் வெளியாகவில்லை.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இது குறித்து அமைச்சா் அருண்ராஜ் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘வி.எஸ்.பாபு தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளாா். அவருக்கு தொடா் கண்காணிப்பு அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியாகும்’ என்றாா்.