கொளத்தூா் எம்எல்ஏவிடம் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா நலம் விசாரிப்பு
மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ள கொளத்தூா் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவை பொதுப் பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா செவ்வாய்க்கிழமை சந்தித்து நலம் விசாரித்தாா்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ள கொளத்தூா் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவை பொதுப் பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா செவ்வாய்க்கிழமை சந்தித்து நலம் விசாரித்தாா். அவரது உடல் நிலை மற்றும் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவா்களிடமும், குடும்பத்தினரிடமும் கேட்டறிந்தாா்.
கொளத்தூா் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபு, தீவிர சுவாசப் பிரச்னைக்குள்ளாகி சென்னை, எம்ஜிஎம் மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு சுவாச ஆதரவு உபகரணங்களுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அவரை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா சந்தித்து நலம் விசாரித்ததுடன் மருத்துவா்களிடம் சிகிச்சை விவரங்களைக் கேட்டறிந்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.