FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வி.எஸ். பாபு உடல்நிலை குறித்து விரைவில் அறிவிப்பு? மருத்துவமனை விரைந்தார் ஆதவ் அர்ஜுனா! போலீஸ் குவிப்பு

மருத்துவமனைக்கு ஆதவ் அர்ஜுனா வந்துள்ள நிலையில் வி.எஸ். பாபு உடல்நிலை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

13 வினாடிகள் முன்பு
வி.எஸ். பாபு - x / VS Babu
பகிர்:

கொளத்துர் தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விரைந்துள்ள நிலையில், உடல்நிலை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு கடந்த 70 நாள்களுக்கும் மேலாக அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் காவல்துறை பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நலம் குறித்து சட்டப்பூர்வமாக அளிக்கக் கூடிய தகவல்களை வெளியிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று வழக்குத் தொடரப்பட்ட நிலையில், இன்று மருத்துவமனைக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விரைந்துள்ளார்.

Advertisement

Advertisement

சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட செம்பியத்தைச் சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி முதல், அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது, உடல்நிலை குறித்து அலுவல் ரீதியான தகவல்கள் ஏதும் வெளியிப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட உரிமை, கண்ணியம், தனி நபரின் ரகசிய மருத்துவ ஆவணங்கள் ஆகியவற்றை வெளியிடும்படி கேட்கவில்லை என்றும், சட்டப்படி அனுமதிக்கப்பட்ட தகவல்களை வெளியிடக் கோரி நவம்பர் 5 மற்றும் 12-ஆம் தேதிகளில் அரசுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து, சட்டப்படி வெளியிடக்கூடிய தகவல்களை வெளியிட உத்தரவிட வேண்டும் என்றும், தொகுதி மக்களின் குறைகள், கோரிக்கைகள் இடையூறின்றி கவனிக்கப்படுவதை உறுதி செய்ய நிர்வாக ரீதியில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தனியார் மருத்துவமனையில் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

summary

Announcement on V.S. Babu’s health condition expected soon; Adhav Arjuna rushes to the hospital! Police deployed in the area.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.