பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார்
பெரியார் அறிவுலக நூல்கள் கொள்முதல் முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார் அளித்திருப்பது பற்றி...
பெரியார் அறிவுலக நூல்கள் கொள்முதல் முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் நேரில் புகார் மனு அளித்துள்ளார்.
பெரியார் அறிவுலகத்துக்குப் புத்தகங்கள் வாங்கியதில் பெரும் ஊழல் நடைபெற்றிருப்பதாக கட்டுரை ஒன்றில் எழுத்தாளர் பெருமாள் முருகன் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கட்டுரை இலக்கிய மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளை இன்று நேரில் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், புகார் மனுவை வழங்கினார். அதில், பெரியார் அறிவுலகத்தில் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த வேண்டும்.
Advertisement
Advertisement
பெரியார் அறிவுலகம் மட்டுமின்றி, பிற பொது நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கப்பட்ட முறை குறித்தும் விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இப்புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் முதற்கட்ட விசாரணையை விரைவில் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.