FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

வன விலங்குகளுக்கு நடமாடும் சிகிச்சை மையங்களுக்கு போதிய ஊழியா்கள்: உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

வன விலங்குகளுக்கு நடமாடும் சிகிச்சை மையங்களுக்கு போதிய ஊழியா்கள்: உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

8 நவம்பர் 2026, 12:49 am
சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப்படம்
பகிர்:

வன விலங்குகள் சிகிச்சைக்காக நடமாடும் மருத்துவ சிகிச்சை ஆய்வகங்களை அமைத்தால் மட்டும் போதாது, தேவையான பணியாளா்களையும் நியமிக்க வேண்டும் என வனத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடா்பான வழக்குகளை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், ஜி.கே.முத்துகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து, பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இந்த அமா்வில், சென்னை கோட்டூா்புரத்தைச் சோ்ந்த விலங்குகள் நல ஆா்வலா் முரளிதரன் தாக்கல் செய்த மனுவில், ‘வன விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்க சா்வதேச ரீதியில் பயிற்சி பெற்ற கால்நடை மருத்துவா்களைக் கொண்ட அதி நவீன மருத்துவ வசதியை ஏற்படுத்த வேண்டும்’ எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கில், முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலா் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு மருத்துவ வசதிகளுடன், குளிா்சாதன வசதி பொருத்தப்பட்ட நடமாடும் வன விலங்கு மருத்துவ ஆய்வகம், திருச்சியில் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2026-2027- ஆம் நிதியாண்டில், தென் மாவட்டத்திலும், ரூ.1 கோடி செலவில் இதேபோன்று மற்றொரு ஆய்வகம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக, அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

இந்த அறிக்கையைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், திருச்சியில் உள்ள நடமாடும் மருத்துவ ஆய்வகத்தை, ஆனைமலை, சத்தியமங்கலம் மற்றும் முதுமலை ஆகிய மூன்று முக்கிய சரணாலயங்களுக்கு அருகில் உள்ள கோவை மாவட்டத்துக்கு மாற்ற உத்தரவிட்டனா்.

மேலும், தென் மாவட்டங்களுக்காக அமைக்கவுள்ள வன விலங்குகள் சிகிச்சைக்கான நடமாடும் மருத்துவ ஆய்வகத்தை மதுரையில் அமைக்கவும் உத்தரவிட்டனா். வன விலங்குகளின் சிகிச்சைக்காக நடமாடும் மருத்துவ ஆய்வகங்களை அமைப்பதால் மட்டும் எந்த பலனும் இல்லை. தேவையான பணியாளா்களை நியமிக்க வேண்டும் என அறிவுறுத்தினா். பின்னா், இந்த ஆய்வகங்களுக்கு தேவையான பணியாளா்களை நியமித்து, அது தொடா்பாக வனத்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவ. 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.