FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

2026தான் தமிழகத்திற்கு தல தீபாவளி; உண்மையான நரகாசுரர்களை முதல்வர் விஜய் அழித்துள்ளார்! அமைச்சர்

தஞ்சாவூரில் இயற்கை வேளாண் விலை பொருள்கள் விற்பனை தொடக்க விழா நிகழ்வைத் தொடங்கிவைத்தார் அமைச்சர் வினோத்...

முதல்வர் விஜய்யுடன் அமைச்சர் வினோத் - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்திற்கு 2026தான் தல தீபாவளி என்றும் தமிழக முதல்வர் உண்மையான நரகாசுரர்களை அழித்துள்ளார், இனி தமிழகத்திற்கு நல்ல காலம்தான் என்றும் வேளாண்துறை அமைச்சர் வினோத் கூறியுள்ளார்.

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் இயற்கை வேளாண் விலை பொருள்கள் விற்பனை தொடக்க விழா இன்று தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள உழவர் சந்தையில் நடைபெற்றது.

விழாவை தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான், மாவட்ட ஆட்சியர் ரேவதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Advertisement

Advertisement

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வேளாண்துறை அமைச்சர் வினோத்,

"தஞ்சை மாவட்டத்தில் 13 இடத்தில் இயற்கை வேளாண் விளைபொருள்கள் விற்பனையகத்தைத் தொடங்கியுள்ளோம்.

தமிழகத்தில் இதுவரை எத்தனையோ தீபாவளி கொண்டாடப்பட்டுள்ளது. ஆனால், உண்மையான தல தீபாவளி இந்த 2026 தீபாவளிதான்.

தமிழக முதல்வர் உண்மையான நரகாசுரர்களை அழித்து தமிழர்களுக்கும், தமிழக மக்களுக்கும் தீபாவளியை கொண்டு சேர்த்துள்ளார்.

இனி தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் எப்போதும் நல்ல காலம்தான்.

உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கு அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்" என்றார்.

பெரியார் நூலக ஊழல் குறித்து கேட்டபோது, திமுக செய்திருப்பார்கள் என்று பதில் கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார்

summary

This is the Real diwali for Tamilnadu: Minister vinoth

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.