FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மேக்கேதாட்டு அணை: யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை: விஜய்க்கு கர்நாடக முதல்வர் பதில்!

மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை என கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்திருப்பது குறித்து...

தமிழக முதல்வர் விஜய் | கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார். - கோப்புப் படம்
பகிர்:

மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை என கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் ஞாயிற்றுக்கிழமை (நவ. 8) தெரிவித்தார்.

தமிழ்நாட்டுக்குத் தொடர்ந்து காவிரி நீர் கிடைக்க வலியுறுத்தியும் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைத்திடும் வகையில் கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஜோசப் விஜய் நேற்று கடிதம் எழுதினார்.

இதுகுறித்து கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் பேசியதாவது:

Advertisement

Advertisement

நாட்டின் சட்டத்தைப் பற்றி தமிழக முதல்வர் அறிந்திருப்பார் என நம்புகிறேன். மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை. தமிழ்நாட்டுக்கு 177 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்ற நிபந்தனையோடு, தனது சொந்த இடத்தில் கர்நாடக அரசு அணையைக் கட்டுவதற்கு இந்திய உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அனுமதி வழங்கியுள்ளது.

மேக்கேதாட்டு அணையால் தமிழகம் மேலும் பயன்பெறும். கட்சி வேறுபாடின்றி, அனைத்து பாஜக மற்றும் என்டிஏ தலைவர்களும் மேக்கேதாட்டு விவகாரத்தில் கர்நாடகத்துக்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டுள்ளனர். தமிழக முதல்வர் கர்நாடகத்துக்கு ஒரு குழுவை அனுப்ப வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த வாய்ப்பை நாங்கள் தவறாகப் பயன்படுத்த மாட்டோம்.

சண்டையிடுவதற்கு இடமில்லை. அந்த நாள்கள் முடிந்துவிட்டன. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கிவிட்டது. நாட்டின் சட்டத்தை மதிப்போம். நாம் ஒன்றிணைந்து செயல்பட்டு, நீரைப் பகிர்ந்துகொள்வோம் என்று டி.கே. சிவகுமார் தெரிவித்தார்.

summary

Karnataka Chief Minister D.K. Shivakumar stated on Sunday (Nov. 8) that there is no need to seek permission from anyone to construct the Mekedatu dam.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.