பெரியார் அறிவுலக விவகாரம்: பொது நூலகத் துறை இயக்குநர் ஜெயந்தி பதவி நீக்கம்! ஷஜீவனா ஐஏஎஸ் நியமனம்!
பொது நூலகத் துறை இயக்குநர் ஜெயந்தி ஐஏஎஸ் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறித்து...
கோயம்பத்தூர் பெரியார் அறிவுலக விவகாரத்தில், பொது நூலகத் துறை இயக்குநராகப் பதவி வகித்த ஐஏஎஸ் அதிகாரி ஜெயந்தி அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கோயம்புத்தூரில் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு, கடந்த அக். 16 ஆம் தேதி தமிழக முதல்வர் விஜய்யால் திறந்துவைக்கப்பட்ட பெரியார் அறிவுலக நூலகத்தில் நூல் கொள்முதலில் ஊழல் நடைபெற்றிருப்பதாகக் கட்டூரை ஒன்றில் எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கிய நிலையில், இதுதொடர்பாக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
Advertisement
Advertisement
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவரான ஐஏஎஸ் அதிகாரி ஜெயந்தி கூடுதல் பொறுப்பாக, பொது நூலகத் துறையின் இயக்குநராகவும் பதவி வகித்து வந்தார்.
இந்த நிலையில், பெரியார் அறிவுலக விவகாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, ஐஏஎஸ் அதிகாரி ஜெயந்தியிடம் இருந்து கூடுதல் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பொது நூலகத் துறையின் புதிய இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி ஷஜீவனா நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.