FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வானிலை: அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 23 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 24 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு...

கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 24 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு காஞ்சிபுரம், திருவள்ளூர், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Advertisement

Advertisement

மேலும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, ஈரோடு, திருப்பூர், சேலம், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி, காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Weather Rain expected in Chennai and 23 districts over the next 3 hours

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.