FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வானிலை: சென்னை, 18 மாவட்டங்களில் மாலை 4 வரை மழை! (அக். 21)

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரம் மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகள் பற்றி...

மழை - பிரதிப் படம்
பகிர்:

சென்னை உள்பட 19 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது.

குறிப்பாக, சென்னை, புறநகர்ப் பகுதிகளில் நேற்று மாலை முதல் விடியவிடிய கனமழை பெய்தது. பல்வேறு இடங்களில் 100 மி.மீ.க்கு மேல் மழை பொழிவு பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கான வானிலை அறிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி, செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், அரியலூர், கடலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம் மாவட்டங்களில் மாலை 4 மணிவரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

summary

Weather: Rain in Chennai, 18 districts till 4 pm! (Oct. 21)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments