FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பெரியார் அறிவுலக ஊழல்: பபாசி நிர்வாகிகளுடன் ராஜ்மோகன் ஆலோசனை!

பபாசி நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

25 வினாடிகள் முன்பு
பெரியார் அறிவுலகம். - DNS
பகிர்:

கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தக கொள்முதலில் ஊழல் நடைபெற்றுள்ளது தொடர்பாக பபாசி நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

கோவையில் திமுக ஆட்சியில் பணிகள் தொடங்கப்பட்டு, சமீபத்தில் முதல்வர் விஜய்யால் திறக்கப்பட்ட கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்தில் நூல்கள் கொள்முதலில் மிகப்பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி விசாரணை தேவை என்று பலரும் வலியுறுத்தி வரும் நிலையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினருடன் (பபாசி) அமைச்சர் ராஜ்மோகன் கலந்துரையாடினர்.

Advertisement

Advertisement

கோவை பெரியார் அறிவுலக ஊழல் மட்டுமின்றி நூலகத் துறையில் நிர்வாக சீர்கேடுகள், குறைகள் குறித்தும் பேசப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வருகிற ஜனவரியில் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளதையொட்டி அதுபற்றியும் பேசப்படுவதாகத் தெரிகிறது.

இந்த கூட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகனுடன் உயர் ஐஏஎஸ் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Minister Rajmohan Consults with BAPASI Office-Bearers

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.