FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மு.க. ஸ்டாலின் ஆட்சியில் அமைதிப் பூங்கா; இப்போது சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! ஓபிஎஸ்

தமிழகத்தில் தொடர் கொலைகளுக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம்.

ஓ.பன்னீர் செல்வம் - படம் - எக்ஸ்
பகிர்:

தமிழ்நாட்டில் இப்போது சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

நேற்று (நவ. 8) தீபாவளி அன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 11 கொலைகள் நடந்திருப்பது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில் குமார் உள்பட திருச்சியில் 3 பேரும், சிவகங்கையில் 2 பேரும் சென்னை, திருவள்ளூர், கடலூர், தேனி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒருவரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

இதற்கு தலைவர்கள் பலரும் தவெக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

"மு.க. ஸ்டாலின் ஆட்சியில் அமைதிப் பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் இப்போது சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 9 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கையை தவிர்த்து மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் கவனம் செலுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

OPS on murders in Tamilnadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.