FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தேனி மாவட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிவாரணம்: முதல்வர் விஜய்

தேனி மாவட்ட டிஎஸ்பி குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிவாரணம் அறிவிப்பு.

முதல்வர் ஜோசப் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

தேனி மாவட்டம், தேனி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் சில நபர்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு இரங்கல் மற்றும் நிதியுதவியை முதல்வர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

”தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து, தேனி காவல் துணைக் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் மாற்றுப்பணியில்  இருந்த  காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கி. செந்தில்குமார் (வயது 57, எண்: 1447) அவர்கள், நேற்று (நவ. 8) இரவு, தனது பணியில் இருந்தபோது, சமதர்மபுரம் பகுதியில் சில நபர்கள் சாலையின் குறுக்கே பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தும் வகையிலும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் பட்டாசுகளை வெடித்து அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தியதால் அவர்களை கண்டித்த போது அவர்கள் தாக்கியதில், பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக  தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

Advertisement

Advertisement

சிறப்பு உதவி ஆய்வாளர் கி. செந்தில்குமாரின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல் துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

கி. செந்தில்குமாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு நாற்பது லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

Chief Minister C. Joseph Vijay has announced his condolences and financial assistance to the family of a Special Sub-Inspector of Police who lost his life after being attacked by certain individuals within the jurisdiction of the Theni Police Station in Theni district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.