FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

50% தள்ளுபடியில் ஜவுளி விற்பனை: ஈரோட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

ஈரோடு ஆர்.கே.வி சாலையில் தீபாவளிக்கு மறுநாள் சிறப்புத் தள்ளுபடியில் புத்தாடைகளை வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம் குறித்து..

தீபாவளிக்கு மறுநாள் சிறப்புத் தள்ளுபடியில் புத்தாடைகளை வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம் - டிஎன்எஸ்
பகிர்:

ஈரோடு: ஈரோடு ஆர்.கே.வி சாலையில் தீபாவளிக்கு மறுநாள் சிறப்புத் தள்ளுபடியில் புத்தாடைகளை வாங்க அலைமோதிய மக்கள் கூட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

​ஈரோட்டின் வர்த்தக மையப் பகுதியான ஆர்.கே.வி. சாலையில் அமைந்துள்ள பிரபல துணிக்கடைகள் மற்றும் கவரிங் நகைக்கடைகள், தீபாவளிப் பண்டிகையைத் தொடர்ந்து நுகர்வோர்களைக் கவரும் வகையில் சிறப்பு அறிவிப்பை வெளியிட்டிருந்தன.​

தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கள்கிழமை அதிகாலை 3 மணி முதல் கடைகளில் உள்ள அனைத்துப் பொருள்களுக்கும் 50 சதவீதம் வரை சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படும் என வணிக நிறுவனங்கள் சார்பாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

தீபாவளிக்கு மறுநாள் சிறப்புத் தள்ளுபடியில் ஈரோடு ஆர்.கே.வி சாலையில் புத்தாடைகளை வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்

வழக்கமாக பண்டிகை முடிந்து கடைகளில் வியாபாரம் குறையும் நிலையில், இந்த 50 சதவீத தள்ளுபடி அறிவிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.​ அதிகாலை 3 மணிக்கு விற்பனை தொடங்க இருந்தபோதிலும், முன்னதாகவே தங்களுக்கு வேண்டிய ஆடைகள் மற்றும் ஆபரணங்களை வாங்க விரும்பிய மக்கள் அதிகாலை 2 மணிக்கே ஆர்.கே.வி. சாலையில் குவியத் தொடங்கினர்.​ கடைகளின் வாசல்களிலும், சாலை முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டதால், அதிகாலை நேரத்திலும் அந்தப் பகுதியே திருவிழா கோலம் பூண்டதுபோல் காட்சியளித்தது.​

ஈரோடு மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்துள்ளதால் போக்குவரத்து நெரிசலும் வர்த்தக விறுவிறுப்பும்​ அதிகாலை நேரத்திலேயே ஆயிரக்கணக்கான வாகனங்களுடன் மக்கள் வீதிகளில் திரண்டதால், அந்த பகுதியில் லேசான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி, நுகர்வோர்களை வரிசையில் அனுப்பி விற்பனையைத் தொடங்கினர்.​

தீபாவளி பண்டிகை முடிந்த பின்னரும், இத்தகைய அதிரடித் தள்ளுபடி சலுகையால் ஈரோடு வர்த்தக வீதிகள் தொடர்ந்து விறுவிறுப்பான சூழலில் இயங்கி வருகின்றன.

Textile sale at a 50% discount: Crowds flock in Erode!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.