FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தவெக ஆட்சியில் 6 மாதத்தில் 50 கொலைகள்! முதல்வர் பதவி விலக வேண்டும்! நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு பற்றி..

முதல்வர் விஜய் | நயினார் நாகேந்திரன் - கோப்புப் படம் | x
பகிர்:

தமிழகத்தில் 6 மாதத்தில் 50-க்கும் மேற்பட்ட கொலைகள், காவலருக்கே பாதுகாப்பு இல்லை. முதல்வர் விஜய் பதவி விலக வேண்டும் என்று திருச்சியில் நயினார் நாகேந்திரன் பேட்டியளித்துள்ளார்.

நெல்லையிலிருந்து திருச்சி வந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில்,

த.வெ.கவின் ஆறு மாத ஆட்சி குறித்து என்ன கூறுவது என்றே தெரியவில்லை. மேற்காசியப் போர் சூழலிலும் இந்தியாவில் மோடி அரசு பெட்ரோல், டீசல் சிலிண்டர் உள்ளிட்ட அவற்றின் விலையை உயர்த்தவில்லை. யூரியா உள்ளிட்ட உரங்களைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக முதலமைச்சர் விஜய் விவசாயிகளுக்கு முழுமையான பயிர் கடன் தள்ளுபடியை அறிவித்தார். ஆனால் இன்று 75 ஆயிரம் வரை தான் கடன் தள்ளுபடி எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

யாரும் இது குறித்து வாய் திறக்கவில்லை. கடந்த ஆறு மாத காலத்தில் 50 படுகொலைகளுக்கு மேல் தமிழ்நாட்டில் நடந்துள்ளது. தீபாவளி அன்று மட்டும் 15 கொலைகள் நடந்துள்ளது. ஆனால் அமைச்சர் ராஜ்மோகன் இதற்கு முன்பும் இதுபோல் கொலைகள் நடந்துள்ளது தற்போது குறைவாகத்தான் நடந்துள்ளது எனக் கூறுகிறார் அமைச்சர். இப்படிப் பேசலாமா? முதலமைச்சர் இது குறித்து எந்த கேள்வியும் கேட்க மாட்டாரா? ஒரு அமைச்சர் இப்படிக் கூறுவது எந்த வகையில் நியாயம். ஆட்சி அதிகாரம் ஆட்சியாளர்களின் கையில் இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.

கர்நாடகத்தில் மேகதாது உள்ளிட்ட எந்த அணைகளும் கட்டக்கூடாது என்பதுதான் தமிழக பாஜகவின் உறுதியான நிலைப்பாடு. தமிழ்நாட்டு மக்களின் நலன் தான் எங்களுக்கு முழு மூச்சு. சட்டம் ஒழுங்கு எங்கு உள்ளது எனக் கேள்வி கேட்கும் நிலை தான் தமிழ்நாட்டில் உள்ளது. தமிழ்நாட்டில் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது. தேனியில் நடந்த சம்பவத்தில் அந்த காவலர் பணியிலிருந்த போது இந்த சம்பவம் நடந்ததாக முதல்வர் கூறுகிறார். ஆனால், உயர் அதிகாரிகள் அவர் சீருடை போடவில்லை என்கிறார்கள் அவர் சீருடை போடவில்லை என்றால் யார் வேண்டுமானாலும் வெட்டலாமா ?

இதற்கு முதலமைச்சர் விஜய் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாக்கத் தான் காவல்துறை உள்ளது. ஆனால், அவர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் மக்கள் என்ன செய்வார்கள். அமைச்சர்களுக்கு தாங்கள் எந்தெந்த துறைகளில் இருக்கிறோம் என்பதை அவர்களுக்குத் தெரிகிறதா இல்லையா என்கிற சந்தேகம் உள்ளது.

திருச்சியில் மனு அளிக்க வந்த நபரைத் துணை அவைத்தலைவர் தாக்கியுள்ளார். பின் அவரை மிரட்டி சமரசம் செய்வது போல் விடியோ வெளியிட்டுள்ளார்கள். மக்கள், காவல் துறையினர், அதிகாரிகள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லை

முதல்வர் என்ன செய்கிறார் என்பதே தெரியவில்லை.

ஒவ்வொரு எம்எல்ஏவும் எல்லை சாமிகளாக இருந்து மக்களைப் பாதுகாப்பார்கள் என முதல்வர் கூறினார். ஆனால் கள்ளக்குறிச்சி எல்லைச்சாமியான எம்எல்ஏ அருள்சாமி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அவர் மீது ஏற்கெனவே பல புகார்கள் வந்துள்ளது. ஆனால் மூத்த அமைச்சர்களிடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் அவர் மீது எடுக்கவில்லை.

தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சித் தலைவருக்குப் பாதுகாப்பில்லை, பெண்களுக்கு, பாதுகாப்பு இல்லை. மூன்று வயதுக் குழந்தை முதல் வயதான மூதாட்டிகள் வரை யாருக்கும் பாதுகாப்பில்லை. ஆட்டை கடித்து மாட்டைக் கடித்து கடைசியாக மனிதர்களைக் கடிப்பதுபோல் தற்போது மாவட்ட ஆட்சியரையும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதுபோல் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்கள்.

இதற்கு உரிய விளக்கத்தை அரசு தரப்பில் அளிக்க வேண்டும். ஆனால் அமைச்சர் ராஜ்மோகன் மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்போம் என்கிறார். தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்ற நிலையில் மோசமான சூழலுக்குச் சென்று கொண்டுள்ளது.

பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் தொடர்பாக அரசு தான் கண்டுபிடிக்க வேண்டும்.

பணியில் இருக்கும் காவலர்கள் உயிரிழந்தால் ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கப்படும் எனத் தேர்தலுக்கு முன்பாக அறிவித்தார்கள் ஆனால், ஆட்சிக்கு வந்த பின்பு தற்போது கொலை செய்யப்பட்டுள்ள சிறப்பு உதவி ஆய்வாளருக்கு ரூ. 40 லட்சம் மட்டும் தான் நிதி உதவி முதலமைச்சர் விஜய் வழங்கியுள்ளார். தேர்தலுக்கு முன்பு கூறியதை ஆட்சிக்கு வந்த பின்பு நடைமுறைப்படுத்தவில்லை. அனைத்து நிலை காவலர்களுக்கும் பாதுகாப்பிற்காக உபகரணங்கள் வழங்குவதை உயரதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெறுகிறது. ஆனால் இது குறித்து முதலமைச்சர் வாய் திறக்காமல் உள்ளார் அதனால் அவர் பதவி விலக வேண்டும் எனக் கூறியுள்ளேன். திமுக ஆட்சியில் பல்வேறு போராட்டங்களில் நடத்திய பாஜக தற்போது அமைதி காப்பது ஏன் என்கிற கேள்விக்கு இன்று தானே ஆறு மாதம் முடிந்துள்ளது. இனி வரும் காலங்களில் நாங்கள் போராட்டங்களில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.