FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை! தனியாருக்கு ஒப்பந்தம் - டெண்டர் வெளியீடு

சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பு செய்வதற்கான பணிகளுக்கான டெண்டர் வெளியீடு

சட்டப்பேரவை - யூடியூப்
பகிர்:

தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையாக ஒளிபரப்பு செய்வதற்காக தனியாருடன் ஒப்பந்தம் போடுவதற்கான டெண்டரை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டிருக்கும் டெண்டரில், தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பு செய்வதற்காக தனியார் நிறுவனங்களிடமிருந்து டெண்டர் கோரப்படுகிறது.

வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2028 ஆம் ஆண்டு டிசம்பர் வரை தொடர்ந்து 2 ஆண்டுகள் ஒப்பந்தத்துக்கான டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

Advertisement

Advertisement

சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நிகழ்வுகளை முழுமையாக தொலைக்காட்சி மற்றும் இணைய ஊடகங்களில் தடையின்றி நேரலையாக ஒளிபரப்பு செய்வதற்கான் தொழில்நுட்பப் பணிகளுக்காக தமிழக அரசு ஒப்பந்தப் புள்ளி கோரியிருக்கிறது.

திமுக - தவெக ஆட்சியில் நேரலை

தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை திமுக ஆட்சியிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்து. ஆனால், கேள்வி - பதில் நேரம் மட்டும் நேரலையில் ஒளிபரப்பானது. ஆனால், தவெக ஆட்சியில் பேரவை நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரலை செய்யப்பட்டு, மக்கள் அதிகமானோர் பேரவை நிகழ்வுகளை பார்த்து வருகிறார்கள்.

summary

Live broadcast of Legislative Assembly proceedings! Contract to be awarded to a private entity – tender issued

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.