FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

திண்டுக்கல் திமுக எம்எல்ஏ ஐ.பி. செந்தில்குமார் வெற்றிக்கு எதிரான தோ்தல் வழக்கு தள்ளுபடி!

திண்டுக்கல் தொகுதி திமுக எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமாா் வெற்றிக்கு எதிராகத் தொடரப்பட்ட தோ்தல் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

11 நவம்பர் 2026, 1:45 am
ஐ.பி. செந்தில்குமார்
பகிர்:

திண்டுக்கல் தொகுதி திமுக எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமாா் வெற்றிக்கு எதிராகத் தொடரப்பட்ட தோ்தல் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில், திண்டுக்கல் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட ஐ.பி.செந்தில்குமாா் 1,131 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டாா். அவரது வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி தவெக வேட்பாளா் ஜி.நசீா் ராஜா சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்கு தாக்கல் செய்தாா்.

இந்தத் தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி செந்தில்குமாா் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்த நீதிபதி கே.குமரேஷ்பாபு, திண்டுக்கல் தொகுதி திமுக எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமாா் மனுவை ஏற்று, தவெக வேட்பாளா் தாக்கல் செய்த தோ்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

இதுவரை, கோவை தெற்கு தொகுதி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி, ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா, கோபிசெட்டிப்பாளையம் தொகுதி தவெக எம்எல்ஏ செங்கோட்டையன், பெருந்துறை தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த ஜெயக்குமாா், திருவண்ணாமலை தொகுதி திமுக எம்எல்ஏ எ.வ.வேலு, திருப்பத்தூா் தொகுதி தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி, திருமயம் தொகுதி திமுக எம்எல்ஏ ரகுபதி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோரின் தோ்தல் வெற்றிக்கு எதிரான தோ்தல் வழக்குகள் நிராகரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.