சீர்காழி திமுக எம்எல்ஏ செந்தில்செல்வன் வெற்றிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!
சீர்காழி திமுக எம்எல்ஏ செந்தில்செல்வன் வெற்றிக்கு எதிரான வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது பற்றி..
சீர்காழி தொகுதி திமுக எம்எல்ஏ செந்தில்செல்வனுக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்பப் பெற அனுமதித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சீர்காழி (தனி) தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் செந்தில்செல்வன் 11,417 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இவரது வெற்றியை எதிர்த்து வாக்காளர் வாசு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி செந்தில்செல்வனும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை திரும்பப் பெறுவதாக வாக்காளர் தரப்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இந்தநிலையில், வழக்கு நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, செந்தில்செல்வனுக்கு எதிரான தேர்தல் வழக்கு திரும்பப் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தேர்தல் வழக்கு தொடர்ந்த மனுதாரர், மனுவைத் திரும்பப் பெற முன்வந்ததால், ஆட்சேபனைகள் தெரிவிக்கவும், வேறு யாரேனும் வழக்கு தொடரவோ உயர்நீதிமன்றம் 15 நாள்கள் அவகாசம் வழங்குவது வழக்கம். செந்தில்செல்வன் வெற்றிக்கு எதிராக ஆட்சபனையோ, தேர்தல் வழக்கோ தொடர யாரும் முன்வராததால், இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.