FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரம்: விரிவான விசாரணை வேண்டும் - டிடிவி தினகரன்

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரத்தில் விரிவான விசாரணை வேண்டும் என டிடிவி தினகரன் கோரிக்கை வைத்திருப்பது குறித்து...

டிடிவி தினகரன் - கோப்புப்படம்
பகிர்:

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரத்தில் விரிவான விசாரணை வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செவ்வாய்க்கிழமை (நவ. 10) கோரிக்கை வைத்துள்ளார்.

இதுதொடர்பாக டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

கொடூர வில்லன்களின் கூடாரமா தவெக? கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதோடு, அவரது இல்லத்திற்கே சென்று விரும்பத் தகாத முறையில் நடந்து கொண்டதாக கள்ளக்குறிச்சி தொகுதி தவெக சட்டப்பேரவை உறுப்பினர் மீது எழுந்திருக்கும் புகார் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

Advertisement

Advertisement

பள்ளி செல்லும் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபடுவதில் தொடங்கி, சொந்த கட்சி நிர்வாகியையே காரில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை என பெண்களை ஆபாச பொருட்களாக நினைக்கும் தவெக கட்சி நிர்வாகிகளின் மீது ஆளும்கட்சியாக இருந்தும் எந்தவித உருப்படியான நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்த தவெக தலைமையால், இன்று மாவட்டத்தின் ஆட்சியருக்கே பாலியல் தொல்லை கொடுக்க முயலும் அளவிற்கான சூழல் தமிழகத்தில் உருவாகியுள்ளது.

மக்கள் நலத்திட்ட பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம், மக்கள் பிரச்னையை புகாராக அளிக்க வந்த நபர் மீது தாக்குதல், மாவட்ட ஆட்சியருக்கே பாலியல் தொல்லை என மக்கள் பணி செய்வதற்காக தவெக தலைவர் ஜோசப் விஜய் பார்த்து பார்த்து தேர்வு செய்த எம்.எல்.ஏக்கள் செய்யும் கேவலமான செயல்கள், தவெக கட்சி என்பது திரையில் நாம் காணும் கற்பனை வில்லன்களை நிஜத்தில் பார்ப்பது போல் உள்ளதாக மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

மக்களுக்காக பணிசெய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளே, ஒரு மாவட்டத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் ஆட்சியருக்கே பாலியல் தொல்லை கொடுக்கும் அளவிற்கான சூழல் நிலவும் தமிழகத்தில், குழந்தைகள் மற்றும் பெண்கள் மட்டுமல்லாது அவர்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அமைக்கப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை உட்பட தமிழகத்தின் அனைத்து மகளிருக்குமான பாதுகாப்பை வழங்குவது யார்? என்ற கேள்வியே தற்போது பிரதானமாக உள்ளது.

எனவே, மேடைக்கு மேடை பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் "சமரசமில்லை" என பேசுவதற்கு முன்பாக தங்கள் கட்சியில் இருப்பவர்களின் ஒழுக்கக்கேடான செயல்களை கண்மூடி வேடிக்கை பார்க்காமல், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அவரது இல்லத்திற்கே சென்று அருவருக்கத்தக்க வகையில் செயல்பட்டதாகவும் சட்டப்பேரவை உறுப்பினர் மீது எழுந்திருக்கும் புகாரை விரிவான விசாரணைக்கு உட்படுத்தி குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு உச்சபட்ச தண்டனை கிடைப்பதை முதல்வர் ஜோசப் விஜய் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

summary

AMMK General Secretary TTV Dhinakaran demanded a detailed inquiry into the Kallakurichi TVK MLA issue on Tuesday (Nov. 10).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.