சர்கார் படத்தை விஜய் மீண்டும் பார்க்க வேண்டும்: மு. வீரபாண்டியன்
திரைப்படத்தில் ஒரு வாக்குக்காக விஜய் போராடியதை குறிப்பிட்டு மு. வீரபாண்டியன் பேசியது தொடர்பாக...
ஒரு வாக்குக்காக திரைப்படத்தில் போராடிய விஜய், நிஜத்தில் 13 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு குரல் கொடுக்காதது ஏன்? என இந்திய கம்யூனிஸ் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் இன்று (நவ. 10) கேள்வி எழுப்பினார்.
சென்னையில் இது தொடர்பாக செய்தியாளர்களுடன் மு. வீரபாண்டியன் பேசியதாவது:
Advertisement
Advertisement
''சினிமாவில் இருந்தபோது தான் நடித்த ஒரு படத்தில் ஒரு ஓட்டுக்காக விஜய் போராடியிருப்பார். அந்த படத்தை அவர் திரும்பப் பார்க்க வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
ஏனெனில், நாட்டில் தற்போது, 13 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள விவகாரத்தில் அவர் ஒருவார்த்தை கூட பேசவில்லை.
வாக்காளர்களை நீக்கி ஜானநாயகப் படுகொலை செய்ததை கண்டிக்கிறேன் என்று ஒரு வார்த்தை கூட அவரால் பேச முடியவில்லை. அவர் மெளனம் காப்பது ஏன்? வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்தில் முதல்வர் விஜய் மெளனம் காப்பது தவறானது'' எனக் குறிப்பிட்டார்.