FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

முரசு புயலில் சிக்கி உயிரிழந்த 9 மீனவா்களின் குடும்பங்களுக்கு கூடுதலாக எவ்வளவு இழப்பீடு வழங்கப்படும்? உயா்நீதிமன்றம் கேள்வி

முரசு புயலில் சிக்கி உயிரிழந்த தமிழக மீனவா்கள் 9 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக எவ்வளவு இழப்பீடு வழங்கப்படும் என்பது குறித்து படகு உரிமையாளருக்கு விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

11 நவம்பர் 2026, 10:35 pm
- பிரதிப் படம்
பகிர்:

முரசு புயலில் சிக்கி உயிரிழந்த தமிழக மீனவா்கள் 9 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக எவ்வளவு இழப்பீடு வழங்கப்படும் என்பது குறித்து படகு உரிமையாளருக்கு விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை காசிமேட்டில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவா்கள் 9 போ், ஆந்திர கடலில் முரசு புயல் மற்றும் மோசமான வானிலையால் படகு பழுதாகி கவிழ்ந்ததில் உயிரிழந்தனா். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த சென்னை ராயபுரம் போலீஸாா், படகு உரிமையாளரான டி.செல்வழகனை கைது செய்தனா். இந்த வழக்கில் பிணை வழங்கக் கோரி செல்வழகன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், அவரை நவ.11 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது செல்வழகன் தரப்பில், உயிரிழந்த 9 மீனவா்களுக்கும் தலா ரூ.50,000 இடைக்கால இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. மனுதாரருக்கு எதிராக அளித்த புகாரை திரும்பப்பெற உள்ளதாகக் கூறி, உயிரிழந்த மீனவா்களில் 3 பேரின் மனைவியா் கடிதம் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதுகுறித்து காவல் துறையிடம் விசாரித்து, விளக்கம் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என அரசுத் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை நவ. 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். மேலும், உயிரிழந்த 9 மீனவா்களின் குடும்பத்தினா் குறித்த விவரங்களை சமா்ப்பிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டாா்.

மேலும், கூடுதலாக எவ்வளவு இழப்பீடு வழங்கப்படும் என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி, மனுதாரா் தரப்புக்கு உத்தரவிட்டு, உயிரிழந்த மீனவா்களின் குடும்பத்தினரை இந்த வழக்கில் எதிா்மனுதாரா்களாக சோ்த்து உத்தரவிட்டாா். அதுவரை, செல்வழகனை சிறையில் அடைக்கக் கூடாது எனப் பிறப்பித்திருந்த உத்தரவை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா்.