மதுரை தனியார் நகைக் கடையில் 500 சவரன் கொள்ளை!
மதுரை தனியார் நகைக் கடையில் 500 சவரன் கொள்ளையடிக்கப்பட்டது பற்றி...
மதுரை காளவாசலில் உள்ள தனியார் நகைக் கடையில் புதன்கிழமை நள்ளிரவு 500 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மதுரை புறவழிச்சாலையில் காளவாசல் பகுதியில் நாட்டின் முன்னணி நிறுவனத்துக்குச் சொந்தமான தனியார் நகைக் கடை அமைந்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த கடை நேற்றிரவு பூட்டப்பட்ட நிலையில், வழக்கம்போல் கடையின் ஊழியர்கள் இன்று காலை திறந்து பார்த்தபோது கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்ததில் முகமுடி அணிந்த மர்ம நபர்கள் நேற்று நள்ளிரவு கடைக்குள் புகுந்து கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக காவல்துறையில் பிரபல நகைக் கடை நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.
முதல்கட்ட தகவல்படி, சுமார் 500 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், கொள்ளையர்கள் கடையின் பிரதான வழியில் நுழையாமல் மேல் தளம் வழியாக நுழைந்திருக்கக் கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
புகாரைத் தொடர்ந்து, தனியார் நகைக் கடைக்குச் சென்ற காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், தடய அறிவியல் நிபுணர்கள் குழுவினரின் கடைக்கு வருகைதந்து சோதனை செய்து வருகின்றனர்.