ஸ்ரீ ஸ்ரீ காளி பூஜை 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா கோலாகலம்! அமைச்சர் சம்பத்குமார் விளக்கேற்றி தொடங்கி வைத்தார்
கோவையில் ஸ்ரீ ஸ்ரீ காளி பூஜை 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டத்தில் அமைச்சர் சம்பத்குமார் பங்கேற்றது குறித்து...
கோவையில் ஸ்ரீ ஸ்ரீ காளி பூஜை 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டத்தை அமைச்சர் சம்பத்குமார் விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
கோவையில் சுவாமி விவேகானந்தா கல்ச்சுரல் அசோசியேஷன் சார்பில் ஸ்ரீ ஸ்ரீ காளி பூஜை கோவை ஆர்.எஸ். புரத்தில் அமைந்துள்ள பலிஜ நாயுடு மண்டபத்தில் நடைபெற்றது.
Advertisement
Advertisement
காளி பூஜையின் 25 ஆவது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டிகள், கட்டுரைகள், ஓவியம் வரைதல், நடன நிகழ்ச்சிகள், ஆடல்- பாடல் உள்ளிட்ட கச்சேரிகள் நடந்து வருகின்றன. இதில் மூன்று நாள்கள் தொடர்ந்து அன்னதானம் வழங்குதல் போன்றவை நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து அமைச்சர் சம்பத் கூறுகையில், தீபாவளி காளி பூஜை என்றாலே கொல்கத்தாவில் மிகப் பிரசித்தி பெற்றது. அதுபோல் கோவையில் சுவாமி விவேகானந்தா கல்ச்சுரல் அசோசியேஷன் சார்பில் நடந்து வரும் இந்த காளி பூஜை பெங்காலி சமூகத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஒன்றிணைந்து காளி பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு நடத்துவது மிகவும் மகிழ்ச்சி தருகிறது என்றார்.