பட்டினப்பாக்கத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு குடியிருப்புகள்! முதல்வர் விஜய் உத்தரவு
பட்டினப்பாக்கத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு குடியிருப்புகள் கட்ட முதல்வர் விஜய் உத்தரவு
புதிய தலைமைச் செயலகம் அமையவிருக்கும் சென்னை பட்டினப்பாக்கத்தில், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்குக் குடியிருப்புகள் கட்டித் தர தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசின் உத்தரவின்படி, சென்னையில் 9 திட்டப் பகுதிகளில் ரூ.1,401.75 கோடியில் சுமார் 6 ஆயிரம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படவிருக்கின்றன.
Advertisement
Advertisement
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினரின் நலனுக்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள புதிய வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய நவீன வீடுகளைக் கட்டித் தரவிருக்கிறது.
இன்று வெளியான உத்தரவில், 1,401.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில்,
சென்னை, அனாதைக்குப்பம் திட்டப்பகுதியில் 64 அடுக்குமாடிக் குடியிருப்புகள்
பழைய பிளாக் வியாசர்பாடி திட்டப்பகுதியில் 1,158 அடுக்குமாடிக் குடியிருப்புகள்
ஃபோர்ஷோர் எஸ்டேட் திட்டப்பகுதியில் 1,484 அடுக்குமாடிக் குடியிருப்புகள்
ருக்மணி நகர் திட்டப்பகுதியில் 111 அடுக்குமாடிக் குடியிருப்புகள்
முல்லை நகர் திட்டப்பகுதியில் 462 அடுக்குமாடிக் குடியிருப்புகள்
உதயசூரியன் நகர் திட்டப்பகுதியில் 850 அடுக்குமாடிக் குடியிருப்புகள்
பச்சைக்கல் வீராசாமி தெரு திட்டப்பகுதியில் 912 அடுக்குமாடிக் குடியிருப்புகள்
மேற்குக் கல்லறை சாலைத் திட்டப்பகுதியில் 792 அடுக்குமாடிக் குடியிருப்புகள்
கக்கன் காலனி திட்டப்பகுதியில் 324 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படவிருக்கின்றன.
அதாவது மேற்சொன்ன 9 திட்டப்பகுதிகளில் 6,157 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன. இவை பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்காக கட்டப்படவிருக்கும் வீடுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.