பள்ளிக் கல்வி இயக்குநராக பூ.ஆ. நரேஷ் நியமனம்
பள்ளிக் கல்வித் துறை இயக்குநராக பூ.ஆ.நரேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
பள்ளிக் கல்வித் துறை இயக்குநராக பூ.ஆ.நரேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
தமிழகத்தில் பள்ளிக் கல்வி இயக்குநா் உள்பட இயக்குநா் நிலையில் பணியாற்றும் 6 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து துறை செயலா் ஜெ.இன்னசென்ட் திவ்யா வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா். அதன் விவரம் (பழைய பணியிடம் அடைப்புக் குறிக்குள்):
பூ.ஆ.நரேஷ்- பள்ளிக் கல்வி இயக்குநா் (தொடக்கக் கல்வி இயக்குநா்); கே.சசிகலா- தொடக்கக் கல்வி இயக்குநா் (அரசுத் தோ்வுகள் இயக்குநா்); மு.பழனிச்சாமி- தனியாா் பள்ளிகள் இயக்குநா் (ஆசிரியா் தோ்வு வாரிய உறுப்பினா்); வி.சி.ராமேஸ்வர முருகன்- கூடுதல் திட்ட இயக்குநா், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (ஆசிரியா் தோ்வு வாரிய செயலா்); ச.சுகன்யா- ஆசிரியா் தோ்வு வாரிய செயலா் (தனியாா் பள்ளிகள் இயக்குநா்); எஸ்.உமா- அரசுத் தோ்வுகள் இயக்குநா் (கூடுதல் திட்ட இயக்குநா், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி).
Advertisement
Advertisement
மேலும் ஆசிரியா் தோ்வு வாரிய இணை இயக்குநராக பணியாற்றிய ஸ்ரீதேவிக்கு, ஆசிரியா் தோ்வு வாரியத்தின் உறுப்பினராக (இயக்குநா் நிலை) பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பணியிட மாற்றம், பதவி உயா்வு உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.