மதுரை நகைக்கடையில் திருட்டு! பூட்டு உடைக்காமல், துளையிடாமல்... எப்படி நடந்தது?
மதுரை நகைக்கடையில் பூட்டு உடைக்காமல், துளையிடாமல் நகைகள் திருடப்பட்டது எப்படி என்பது பற்றி..
மதுரை காளவாசலில் புதிதாகத் திறக்கப்பட்ட நகைக் கடை ஒன்றில் முகமூடி அணிந்த செகாள்ளையர்கள், புகுந்து 500 சவரன் தங்க நகைகளைத் திருடிச் சென்றிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மிகவும் பரபரப்பான சாலையில் அமைந்துள்ளது, அதுவும் நகைக்கடை திறந்து வெறும் 15 நாள்களே ஆன நிலையில், நக் கடையில் திருட்டுச் சம்பவம் நடந்திருப்பதும், கடையின் பூட்டை உடைக்காமல், சுவரில் துளையிடாமல், திருடர்கள் நகைக் கடைக்குள் எவ்வாறு புகுந்தனர் என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.
Advertisement
Advertisement
முகமூடி அணிந்திருந்த திருடர்கள், மாடி வழியாக கடைக்குள் புகுந்து நகைகளைத் திருடிச் சென்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று காலை வழக்கம் கோல கடைக்கு வந்து கதவுகளைத் திறந்தபோதுதான், ஊழியர்கள், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
கடைக்குள் திருடர்கள் எவ்வாறு நுழைந்திருப்பார்கள் என்பதே இப்போதைய முதல் விசாரணையாக உள்ளது. மாடியில் இருந்து லிஃப்ட் வழியாக அல்லது வேறு ஏதேனும் மின் விசிறிக்கான துளை வழியாக உள்ளே நுழைய வாய்ப்பிருக்கிறதா என்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடைக்குள் ஊழியர்கள் யாரும் அனுமதிக்கப்படாமல், பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. நகைக் கடைக்கு அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளையும் காவல்துறையினர் ஆராய்ந்து வருகிறார்கள்.