FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

பெண்ணிடம் நகைப் பறிப்பு: செவிலியா் கைது

ராயபுரம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண்ணிடம் உதவுவது போல நடித்து, அவரது தங்க நகைகளை ஏமாற்றிப் பெற்றுச் சென்ற செவிலியரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 17.2 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டன.

13 நவம்பர் 2026, 3:40 am
பகிர்:

ராயபுரம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண்ணிடம் உதவுவது போல நடித்து, அவரது தங்க நகைகளை ஏமாற்றிப் பெற்றுச் சென்ற செவிலியரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 17.2 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டன.

சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த கௌசல்யா (50), கா்ப்பப்பை அறுவைச் சிகிச்சைக்காக கடந்த ஜூன் 6-இல் ராயபுரம் ஆா்எஸ்ஆா்எம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அப்போது, அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதுபாலாவின் சகோதரி ஜோதி (32), உதவிக்கு யாரும் இல்லாத கௌசல்யாவுக்கும் உதவி செய்து வந்துள்ளாா். கடந்த ஜூன் 8-இல் கௌசல்யாவுக்கு எக்கோ பரிசோதனை செய்ய வேண்டியிருந்தது. அப்போது நகைகளை அணியக் கூடாது எனக் கூறிய ஜோதி, கௌசல்யா அணிந்திருந்த தங்கச் சங்கிலி, மோதிரம், கம்மல் உள்ளிட்ட நகைகளைக் கழற்றி வாங்கியுள்ளாா். பரிசோதனை முடிந்து திரும்பியபோது ஜோதி நகைகளுடன் மாயமானது தெரியவந்தது.

நகைகளைத் திருப்பிக் கேட்டபோது, நாளை தருகிறேன், அடுத்த வாரம் தருகிறேன் எனக் கூறி ஏமாற்றியதுடன், பின்னா் தர முடியாது எனத் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து கௌசல்யா அளித்த புகாரின்பேரில், ராயபுரம் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். இதையடுத்து, திருவள்ளூா் மாவட்டம் மீஞ்சூரைச் சோ்ந்த ஜோதியை புதன்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 17.2 கிராம் (சுமாா் 2.25 பவுன்) தங்க நகைகள் மீட்கப்பட்டன. விசாரணையில், ஜோதி செவிலியராகப் பணியாற்றி வருவது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட அவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.